தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆலோசனை தொடங்கியுள்ளது.
அதிமுக தங்கள் அணியை பலப்படுத்தவும், திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்கவும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதே நேரம் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் எதிர்கட்சியான அதிமுகவிற்கும் ஷாக் கொடுத்து வருகிறார். விஜய் செல்லும் இடமெங்கும் கூட்டம் கூடி வருகிறது.