விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த சகாயஜோஸ் (24) என்பது தெரிய வந்தது. இவர் பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் சில்மிஷம் செய்ததை ஒத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறும்போது: நான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். அத்துடன் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டை நோட்ட மிட்ட போது வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கண்டேன். இதனால் வீட்டில் அவரது கணவர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாடி கதவின் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றேன் என்றார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் 8 திருட்டு வழக்குகளும், 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.