மதுரை, திருச்சி, மரக்காணம் எல்லாமே மாறுது.. அவினாசியில் இதை பார்த்தீங்களா!

Published : Aug 12, 2025, 11:41 AM IST

தமிழ்நாட்டில் பல புதிய தேசிய நெடுஞ்சாலை மற்றும் உயர்நிலைச் சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடற்கரைச் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், விரைவுச்சாலைகள் போன்றவை இதில் அடங்கும்.

PREV
15
தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்கள்

தமிழ்நாட்டில் அடுத்த சில ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து வசதி மேலும் மேம்பட உள்ளது. மத்திய மாநில மற்றும் அரசுகள் இணைந்து பல புதிய தேசிய நெடுஞ்சாலை மற்றும் உயர்நிலைச் சாலை திட்டங்களைத் தொடங்கியுள்ளன. இதில், கடற்கரை சாலைகளின் விரிவாக்கம், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மேம்பாலங்கள், மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் விரைவுச்சாலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

25
மரக்காணம் புதுச்சேரி சாலை மேம்பாடு

மரக்காணம் - புதுச்சேரி (ECR) நெடுஞ்சாலை 46 கி.மீ நீளத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது. ரூ.2,157 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதனுடன், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஜி-கார்னர் சந்திப்பு பகுதியில் நெரிசலை குறைக்க ரூ.60 கோடியில் உயர்நிலை வட்டம் சந்திப்பு (Elevated Rotary) அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

35
அவினாசி உயர்மட்ட சாலை

மேலும், பரமக்குடி – இராமநாதபுரம் (NH-87) 46.7 கி.மீ நீளச் சாலை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். ரூ.1,853 கோடி செலவில் ஹைப்ரிட் அன்னூட்டி முறைப்படி (HAM) இது நடைமுறைப்படுத்தப்படும். கோயம்புத்தூரின் அவினாசி சாலை உயர்மட்ட விரைவுச்சாலை 10.1 கி.மீ நீளத்தில், 12க்கும் மேற்பட்ட சந்திப்புகளைத் தவிர்க்கும் வகையில் கட்டப்படுகிறது. முடிவடைந்தால், இது தமிழகத்தின் நீளமான உயர்மட்ட சாலை ஆகும்.

45
மதுரை கொல்லம் நெடுஞ்சாலை

மேலும், மதுரை – கொல்லம் (NH-744) நெடுஞ்சாலை 208 கி.மீ நீளத்தில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, திருமங்கலம் – ராஜபாளையம் 68 கி.மீ பகுதி கட்டணச் சாலையாக மாற்றப்படுகிறது. இதனுடன், மாநில அரசின் சாலைத் துறை பல மாநில நெடுஞ்சாலைகளை (SH) மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. செஞ்சூர் - போளூர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம், திருச்செந்தூர் - பலயங்கோட்டை போன்ற சாலைகளும் இதில் அடங்கும்.

55
சுற்றுலா வளர்ச்சி சாலை திட்டம்

இந்த அனைத்து திட்டங்களும் முடிவடைந்தால், தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்து வேகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மிகவும் உயரும். நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு மேம்படும். சுற்றுலா, வணிகம், தொழில் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அடுத்த சில ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories