முத்தமைிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறது தான் இந்த மாநாடு... அதனால தான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, “வாகை சூடும் வரலாறு திரும்புறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்,
மாற்று சக்தி நாமன்று,
முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.