இந்து மத கடவுள்களில் ஒருவரான ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரித்த கவிஞர் வைரமுத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து இந்து மத கடவுள்களில் ஒருவரான வைரமுத்து குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அவர் பேசத் தொடங்கியதும் பொதுமக்கள் மத்தியில் பெரிய ஆர்வம் இல்லாத காரணத்தால் அனைவரும் கைத்தட்டுங்கள், நான் பேசப்போகிறேன் என்று கேட்டுக் கொண்டு தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்ற தொணியில் அவர் பேசிய கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
23
கைதட்டுக்காக கடளை இழிவு படுத்துவதா?
வெறும் கைதட்டளுக்காக குறிப்பிட்ட மதத்தவரின் கடவுளையே இழிவுபடுத்தும் வகையில் பேசுவதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த கையில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக பேசுகையில், கடவுள் ராமர் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர். அப்படி வாழ்ந்தால் தான் கவிஞருக்கு பிடிக்காதே.
33
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இப்படி தான் தவறாக சித்தரிப்பீர்களா?
கவிஞர் வைரமுத்து தாம் தான் தமிழ்நாட்டுக்கே டிஷ்னரி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்திற்கோ, ராமருக்கோ நீங்கள் புதிதாக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ராமாயணம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை தவிர்த்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால் அதனை இப்படி தவறாக எடுத்துரைக்காதீர்கள்.
ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் குறித்து பொய் பேசியதாலும், முறையான அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை ஏதோ தியாகியை கைது செய்தது போல் பேசாதீர்கள் என்றார்.