மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன்! 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் வழக்கில் ட்விஸ்ட்! என்ன நடந்தது?

Published : Aug 11, 2025, 10:12 PM IST

நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

PREV
14
Actress Meera Mithun Admitted To Delhi Mental Hospital

பிரபல நடிகை மீரா மிதுன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைதுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மீரா மிதுன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

24
தலைமறைவான நடிகை மீரா மிதுன்

இதனால் பொறுமையிழந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மீரா மிதுனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனாலும் அவர் எங்கே இருக்கிறார்? என்பதை போலீசாரால் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாததால் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டிருந்தது.

மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி

இதற்கிடையே இந்த மாதம் (ஆகஸ்ட்) 4ம் தேதி, மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை இன்றுக்குள் (ஆகஸ்ட் 11) ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

34
நீதிமன்றத்தில் போலீசார் சொன்னது என்ன?

அதாவது ''மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வர முடியவில்லை. உடல்நிலை மேம்பட்டு, பயணத்திற்கு தகுதியானவர் என மருத்துவர்கள் சான்றளித்தவுடன் மீரா மிதுனை ஆஜர்படுத்துகிறோம்'' என்று குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்துள்ளது.

44
மீரா மிதுன் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்?

மீரா மிதுனுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவர் உடல் மற்றும் மனரீதியாக குணமடைந்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவரது சிகிச்சை விவரங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் அளிக்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories