தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறநிலையத்துறையின் கீழ் கோயில்களில் குடமுழக்கு நடத்துவது, கோயில் நிலங்களை மீட்பது, அன்னதானம் திட்டம் செயல்படுத்துவது என அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்த வகையில் ஆன்மிகத்தில் அதிகளவு நாட்டம் உள்ளவர்களுக்காக ஆன்மிக சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் முதல் காசிக்கு மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருமாள் கோயில் சுற்றுலா, அம்மன் கோயில் சுற்றுலா என பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாளய அமாவாசை மற்றும் பிரம்மோத்ஸவத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.