8வது படித்திருந்தாலே போதும்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை- உடனடியாக விண்ணப்பிக்க அழைப்பு

Published : Sep 25, 2024, 07:14 PM ISTUpdated : Sep 25, 2024, 07:21 PM IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2024.

PREV
14
8வது படித்திருந்தாலே போதும்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை- உடனடியாக விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய மற்றும் மாநில காலிபணியிடம்

மத்திய மற்றும் மாநில அரசு பணியில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம் மத்திய அரசின் ரயில்வே மற்றும் பிற துறைகளுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதே போல தமிழகத்திலும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வு நடத்தப்பட்டு பணியாளர் நியமிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி புரிய வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

24

உயர்நீதிமன்றத்தில் வேலை

அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றம் வளாகம், சட்ட அலுவலர்கள் கட்டிடம், 3வது தளத்தில் அமைந்துள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. 

34
Chennai High court

தகுதி

இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்ஸிம் அல்லாதவர்) மற்றும் (முன்னுரிமை அல்லாதவர்கள்) [BC (other than BC Muslim) and (Non - Priority)] விண்ணப்பிக்கலாம்.  01. 07. 2024 அன்றைய தினத்தில்  18 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பள விகிதம் ஊதிய நிலை 1. ரூ. 15 700/- ஆகும்.

44
Madras High court

விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது.?

இதற்கான விண்ணப்பத்தினை, "அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் சட்ட அலுவலகர்கள் கட்டிடம் (3 வது தளம்), சென்னை 600 104" என்ற முகவரிக்கு 25. 10. 2024 மாலை 5. 45 மணிக்குள் வந்து சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் "அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்" என்று
எழுதப்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், கல்வித்தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப உறையினுள் முகவரியுடன் கூடிய ஒரு "Self envelope cover affixed with Rs. 50/- Postal Stamp" வைத்து அனுப்புமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!

Recommended Stories