மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் ரெடி.? எப்போ தொடங்குது தெரியுமா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

Published : Jul 04, 2025, 09:21 AM IST

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 15 முதல் 'மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

PREV
15
மகளிர்களுக்கான திட்டங்கள்

மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்து வருகிறது. அந்தவ கையில் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் தமிழகத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பட்டது. மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான சமூக நலத் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை மூலம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுத்து வருகிறது.

25
மகளிர் உரிமை தொகை திட்டங்கள்

2023 செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். நன்செய் நிலம் 5 ஏக்கருக்கு கீழ் அல்லது புன்செய் நிலம் 10 ஏக்கருக்கு கீழ் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பல லட்சம் மக்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

எனவே தங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் 2.27 கோடி குடும்பத் தலைவிகளில் 60% பேருக்கு இத்தொகை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

இந்த திட்டத்திற்காக 2023-24 நிதியாண்டில் 8,123.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து 2024-25 நிதியாண்டில் 13,722.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 9 முதல் 10 மாத காலமே உள்ள நிலையில் புதிய பயனாளிகளை சேர்க்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில் மூன்று மாதங்களுக்குள் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 2025 முதல் தொகை வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜூலை 15 ம்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்கள் தொடங்க உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்கப்படவுள்ளது.

45
ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசின் திட்டங்களை ஆய்வு செய்தும், திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் சிதம்பரம் மற்றும் கடலூரில் ஜூலை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கள‌ஆய்வு மேற்கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். 15 ஆம் தேதி சிதம்பரத்தில் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட அரசின் சேவைகள் முகாம்களை தொடங்கி வைக்க உள்ளார்.

 இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாவும் வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை பெற தற்போது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும். அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

55
‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’

‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டமானது நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளது. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும், இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை பெறலாம். முன்னதாக தன்னார்வலர்கள் வீடு தேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி விளக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories