TVK Maanadu
தமிழகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்படுவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றி தான். அனைத்து டிவி சேனல்கள் பார்வையும் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருகின்றனர். இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற உள்ளது.
Vijay TVK Maanadu
இந்த மாநாட்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சளை அம்மாள், வேலுநாச்சியார் மற்றும் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதில், திராவிட கட்சியை சேர்ந்த அண்ணா புகைப்படம் இடம் பெறவில்லை. இதை சில அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
Premalatha Vijayakanth
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.