தமிழகமும் கோயிலும்
தமிழகம் ஆன்மீக தளமாகவே பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு கோயில்கள் நிறைந்து காணப்படுகிறது. சென்னையில் தொடங்கி ராமேஸ்வரம் வரை பல கோயில்கள் உள்ளது. குறிப்பாக சென்னையில் பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஶ்ரீரங்கம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில், தஞ்சை பெரிய கோயில் என ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளது. அந்த வகையில் தமிழக கோயிங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் பல்வேறு சுற்றுலாவை தமிழக அரசின் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது.
கோயில்களுக்கு சுற்றுலா
அதன் படி, தமிழகம் முழுவதும் கோயில்கள், மலைப்பகுதிகள், தேவாலயம், மசூதி என பல இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் 8நாள் தமிழக சுற்றுலாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2 மற்றும் 3 நாட்கள் சுற்றி பார்க்கும் வகையில் நவகிரக சுற்றுலா, நான்கு நாட்கள் அறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா, ஒரு நாள் முருகன் கோயில் சுற்றுலா, மற்றும் 4 நாட்கள் அறுபடை வீடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
Meenakshi Amman
108 அம்மன் கோயில் சுற்றுலா
இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோயில்களை தரிசிக்கும் வகையில் சுற்றுலாவும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த சுற்றுலாவானது சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, விழுப்புரம் என அந்த பகுதியில் உள்ள 108 அம்மன் கோவிலில் தரிசிக்கும் வகையில் இந்த சுற்றுலாவானது அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் இந்த சுற்றுலாவிற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆன்மிகத்தில் அதிகம் நாட்டமுள்ள மக்கள் இந்த சுற்றுலாவை அதிக அளவில் பயன்படுத்து வருகின்றனர்.
சுற்றுலா கட்டணம் எவ்வளவு.?
இந்த சுற்றுலா, ஒவ்வொரு வாரமும், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், சென்னையில் இருந்து புறப்பட்டு, ஐந்தாம் நாள் இரவு, சென்னை வந்தடையும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் தங்கவைக்கப்படுவார்கள் . இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 11,250 வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 2533 3444, 2533 3333, 2533 3286 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.ttdconline.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.