புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா.? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு

First Published | Oct 27, 2024, 9:52 AM IST

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு  முக்கிய ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக ரேஷன் கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RATION CARD

ரேஷன் கார்டு- நலத்திட்ட உதவிகள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மாதம் ஒரு முறை வழங்கப்படும் இந்த உணவு பொருட்களால் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் அட்டை முக்கிய தேவையாக உள்ளது. எனவே ரேஷன் அட்டையை பெற மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் அட்டை தேவையாகும்,

புதிதாக 3 லட்சம் பேர் விண்ணப்பம்

பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட உதவிகளானது ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் உரிமை தொகை பெறவும் முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு மட்டுமே உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தில் இடம்பெற கோடிக்கணக்கானவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் உரிய தகுதி மற்றும் ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் பல லட்சம் பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே புதிய ரேஷன் கார்டு கேட்டு சுமார் 3 லட்சம் பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் 3 லட்சம் புதிய ரேஷன் கார்டு கேட்டதால் தமிழக அரசே திக்குமுக்காடி போனது.

Tap to resize

விண்ணப்பத்தின் மீது பரிசீலனை

இதனால் கடந்த ஒரு வருடமாக புதிதாக ரேஷன் கார்டு வழங்காமல் இருந்து வந்தது. இதனால் நாள் தோறும் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு மக்கள் அழைந்து வந்தனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சரியான ஆவணங்களுடன் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

முதல் கட்டமாக ஒரு லட்சம் பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதுமுள்ளவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் பெரும்பாலான மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Ration shop

இரண்டு ஆவணங்கள் முக்கியம்

இந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உணவு பொருள் வழங்கல் துறை முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இதன் படி இரண்டு முக்கிய ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டு கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்கள் திருமண சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ளது. மேலும் இறப்பு தொடர்பான ஆவணங்களையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்தால் உடனடியாக புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என கூறியுள்ளது. 

Latest Videos

click me!