தளபதி மாநாடு vs சர்கார்: ரீலும் ரியலான சரித்திரம் – விஜய்யின் சர்காரை மிஞ்சும் விக்கிரவாண்டி டிவிகே மாநாடு!

First Published Oct 27, 2024, 9:33 AM IST

TVK Maanadu in Vikravandi: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இந்த மாநாடு, கட்சிக் கொள்கைகள் மற்றும் விஜய்யின் அரசியல் உரையை மையமாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாநாடு விஜய்யின் சர்கார் படத்தை நினைவூட்டுவதாகவும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamilaga Vettri Kazhagam, TVK Vijay Manadu, TVK Maanadu in Vikravandi

TVK Maanadu in Vikravandi: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களின் பட்டியலில் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, சீமான், விஜயகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது வரிசையில் தற்போது நடிகர் தளபதி விஜய்யும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதுவரையில் சினிமாவில் மட்டுமே அரசியல் வசனம் பேசி வந்த விஜய், தற்போது உலக அரசியல் பற்றியும் பேச தொடங்கியிருக்கிறார்.

TVK Maanadu, TVK Vijay Maanadu in Vikravandi

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் அதன் பிறகு கட்சி கொடியையும் வெளியிட்டார். அதன் பிறகு கட்சி தொடர்பாக ஒவ்வொரு வேலையாக செய்து வந்த விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் இன்று நடத்துகிறார். இதற்காக ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் இந்த அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது.

Latest Videos


TVK Vijay Manadu, TVK Maanadu in Vikravandi

இதில் முழுக்க முழுக்க கட்சி கொள்கைகள் குறித்தே விஜய்யின் அரசியல் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என்று அனைவரும் மாநாட்டிற்கு வருபவர்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கின்றனர்.

Vikravandi Manadu, TVK Maanadu in Vikravandi

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஒவ்வொரு மண்டலத்திலும் குடிநீர் வசதிகள்

கழிவறை வசதிகள்

விடுபட்ட மண்டலம்

உதவி மையம்

500க்கும் அதிகமாக கண்காணிப்பு கேமரா

5 நுழைவு வாயில் மற்றும் 13 வெளியேறும் வாயில்

தனியார் பாதுகாப்பு குழு கண்காணிப்பு

150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குழு

வாகனங்கள் நிறுத்தும் இடம்

ஆம்புலன்ஸ் சேவை

என்று ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை விஜய் செய்திருக்கிறார். இதுவே விஜய்யின் முதல் வெற்றி மாநாடாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy Vijay, TVK Maanadu in Vikravandi

விஜய்யின் இந்த அரசியல் மாநாட்டை பார்க்கும் போது தளபதி நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சர்கார் படத்தை நினைவூட்டுகிறது. இந்தப் படத்தில் வெளிநாட்டில் ஒரு தனியார் கம்பெனியில் சிஇஓவாக இருக்கும் விஜய் ஓட்டு போடுவதற்காக இந்தியா வருகிறார். அங்கு தனது சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்கிறார்.

TVK Thalapathy Manadu, TVK Maanadu in Vikravandi

ஆனால், தனது வாக்கு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு நீதிமன்றம் செல்கிறார். இதற்கிடையில் ஒவ்வொரு ஏரியாவிலும் லட்சக்கணக்கானோர் கள்ள ஓட்டு செலுத்தியிருப்பது தெரிய வருகிறது. தேர்தலுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. தனது சிஇஓ வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறார். எதிர்க்க ஆளே இல்லை என்ற எண்ணம் தான் ஜனநாயகத்தின் முதல் ஆபத்து என்றெல்லாம் அரசியல் வசனம் பேசுகிறார்.

Thalapathy Vijay, TVK Maanadu

எதிர்கட்சிகள் நடத்தும் மாநாட்டுக்கு படை சூழ பைக்கிள் புறப்பட்டுச் செல்கிறார். நானும் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். இதையடுத்து பல சம்பவங்களுக்கு பிறகு இறுதியில் தேர்தலில் ஜெயிக்கிறார். ஆனால், முதல்வராக வேறொருவரை தேர்வு செய்கிறார். உண்மையில் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும் சர்கார் படத்திற்குமே நிறைய தொடர்புகள் இருப்பது இவற்றின் மூலமாகவே தெரிகிறது. எப்படி என்றால் விஜய் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லி அரசியலுக்கு வருகிறார்.

TVK Vijay Manadu, TVK Maanadu in Vikravandi

சர்காரில் சிஇஓ பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். ரியலில் அரசியல் வசனம் பேசினார். இன்று நிஜத்தில் அரசியல் வசனம் பேசுகிறார். இப்படி பலவற்றை உதாரணமாக சொல்லலாம். பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தார்மீக மந்திரத்தை வாசகமாக கொண்டு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே தனது முதல் அரசியல் மாநாட்டை இன்று முன் வைக்கிறார்.

click me!