விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) முதல் அரசியல் மாநாட்டில் தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பல ஏற்பாடுகளை விஜய் செய்திருக்கிறார். மேலும், ஏற்பாடுகள் நடந்த இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.
விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறும் இந்த டிவிகே சாலையில் தனது ரசிகர்கள், தொண்டர்களுக்கு என்று குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாப்பாடு, பார்க்கிங் வசதி, 5 நுழைவு வாயில், 500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள், பஞ்சர் கடை, 150க்கும் அதிகமான மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் சேவை, தனியார் பாதுகாப்பு குழு என்று ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.