விஜய்க்கு காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி.! கதறி துடிக்கும் தவெக நிர்வாகிகள்

First Published | Nov 21, 2024, 9:57 AM IST

தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. புதுச்சேரி மாநில நிர்வாகி, திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Thalapathy 69

அரசியல் களத்தில் விஜய்

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், திரைத்துறையில் நம்பர் ஒன் நடிகராக வளம் வரும் விஜய், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் புகுந்துள்ளார். அந்த வகையில் கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்த விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி இந்தியாவையே திரும்ப பார்க்கவைத்தார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

vijay

தவெக நிர்வாகி உயிரிழப்பு

இந்தநிலையில் தான் விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் தவெக மாநாட்டு பணியை கவனித்து வந்த புதுச்சேரி மாநில நிர்வாகிக்கு திடீரென எற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 

இதே போல  தவெகமாநாட்டிற்கு காரில் வந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Tap to resize

மதுரை இளைஞர் அணி நிர்வாகி உயிரிழப்பு

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை தெற்கு மாவட்டம் இளைஞரணி தலைவர் ஆனந்த்  இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.  மதுரை பொன்மேனி பகுதியில் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் தனியாக கழன்று உள்ளது. இதனால் தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கதறும் தவெக நிர்வாகிகள்

மருத்துவமனையில் ஆனந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மருத்துமனை வாயிலில் கதறி அழுது வருகின்றனர். இந்தநிலையில் மதுரை இளைஞர் அணி நிர்வாகி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து தவெக தலைவர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

Latest Videos

click me!