வெங்காயத்தின் விலை மீண்டும் கூடியதா.? குறைந்ததா.? காய்கறி சந்தையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

First Published | Nov 21, 2024, 8:52 AM IST

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் காய்கறி சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாயை எட்டியது. டெல்லியில் அதிகளவு வெங்காயம் தேவை இருப்பதால் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

Onion Price Today

தக்காளி, வெங்காய விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறியாகும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்காளி , வெங்காயம் மற்றும் பச்சி காய்கறிகளின் விலையானது அதிகரித்தது. அதிலும் முக்கியமாக தக்காளியும், வெங்காயமும் நீயா.? நானா.? என போட்டி போட்டு உயர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 100 ரூபாயை எட்டியது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி செல்லும் பொதுமக்கள் குறைந்த அளவே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கும் நிலை உருவானது. இதனையடுத்து ஒரு சில நாட்களில் தக்காளி வரத்து காய்கறி சந்தைக்கு அதிகரித்தது.

TOMATO

ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?

இதனால் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அதே நேரத்தில் வெங்காயத்தின் விலை மட்டும் உச்சத்திலையே நீடித்தது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் காய்கறி சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாயை எட்டியது. இதனால் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்த நிலையில் மத்திய அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் படி 
மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் தொகுப்பிலிருந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்பட்டது.

Tap to resize

onion

உச்சத்தை தொட்ட வெங்காய விலை

அந்த வகையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் லாரிகள் மூலம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் இந்த பல்வேறு இடங்களுக்கு முழுமையாக சென்று சேராத காரணத்தால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலையே நீடிக்கிறது. மேலும் டெல்லியில் அதிகளவு வெங்காயம் தேவை இருப்பதால் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து  840 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் மூலம் டெல்லியில் உள்ள கிஷன் கஞ்ச் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது. டெல்லிக்கு இதுவரை நான்காவது முறையாக வெங்காயம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ONION

ரயிலில் டெல்லிக்கு வந்த வெங்காயம்

இந்த வரிசையில் ஐந்தாம் தொகுப்பாக 720 மெட்ரிக் டன் எடையுள்ள வெங்காய தொகுப்பு நாசிக்கிலிருந்து புறப்பட்டு இன்று டெல்லியை வந்தடைந்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வெங்காயம் விலை சற்று குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல சென்னைக்கும் 800 டன் வெங்காயம் கடந்த மாதம் அனுப்பப்பட்டது.

விரைவில் தமிழகத்திற்கும் மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் தொகுப்பிலிருந்து  அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மீண்டும் காரிஃப் பயிர் வெங்காய வரத்து வர தொடங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக இனி வெங்காய விலை குறையும் என எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

VEGETABLE

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று  20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

VEGETABLE

பச்சை காய்கறி விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25க்கும் பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!