சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! இல்லத்தரசிகள் ஷாக்! LPG லாரிகள் வேலை நிறுத்தம்!

Published : Oct 09, 2025, 07:51 PM IST

LPG Tanker Strike: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராடத்தை தொடங்கியுள்ளன. இதனால் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

PREV
14
எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற பிறகு, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

24
புதிய விதிமுறையால் சிக்கல்

2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. எண்ணெய் சந்தை நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய ஏல முறையின் கீழ் 3,478 லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

34
ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்

ஆனால் இப்போது 5,514 லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 2,036 லாரிகள் ஒப்பந்தங்களை இழக்கும் நிலை உருவாகி, ஓட்டுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏல விதிகளை ரத்து செய்து விட்டு பழைய ஏல விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கையிலெடுத்தனர்.

44
சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

LPG லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ள எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories