ரொம்ப ரொம்ப கம்மியான வட்டியில் தனி நபர் கடன்.! கூட்டுறவு வங்கியில் லோன் மேளா- அசத்தல் அறிவிப்பு

Published : Jul 03, 2025, 10:52 AM ISTUpdated : Jul 03, 2025, 11:09 AM IST

சென்னையில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு ரூ. 400 இலட்சம் கடன் உதவி வழங்கப்படவுள்ளது. ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 28 வரை கூட்டுறவு வங்கிகளில் லோன் மேளாக்கள் நடைபெறும்.

PREV
15
வங்கியில் கடன் முகாம்கள்

மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் சொந்த தொழில் தொடங்க தனி நபர் கடன், சுய உதவிக்குழு கடன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் சுயதொழில் தொடங்கவும், பொருளாதார முன்னேற்றம் அடையவும் உதவப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர் கடன், குழு கடன், கறவை மாட்டு கடன், சிறு/குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

 கூட்டுறவு கடன் அமைப்புகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான கடன்கள் வழங்கப்படுகின்றன.

25
கடன் உதவி திட்டம் லோன் மேளா முகாம்கள்

இந்த நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சென்னை மாவட்டத்தில். 2025-26ஆம் ஆண்டிற்கான டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் உதவி திட்டம் லோன் மேளா முகாம்கள் நடைபெறவுள்ளது.  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், 

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் கடன், பெண்கள்/ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.300.00 இலட்சம் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

35
100 லட்சம் கடன்கள் வழங்க இலக்கு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்களான தனிநபர் கடன். சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.100.00 இலட்சம் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

45
கூட்டுறவு வங்கியில் கடன் திட்டம்

டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய ஏதுவாக கீழ்கண்ட அட்டவணைப்படி லோன் மேளா சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தணைடையார் பேட்டை, பெரம்பூர், திருவிக நகர், கொடுங்கையூர் பகுதியில் மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
லோன் மேளா - பயன்பெற அழைப்பு

எனவே, டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும். சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்கள் / கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் உரிய ஆவணங்களுடன் மேற்படி லோன் மேளா நடைபெறும் முகாம்களில் அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து. கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories