இவ்வளவு கம்மியா வட்டியா.!!! 30 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

Published : Oct 11, 2025, 09:16 AM IST

Low interest loan : தமிழக அரசு தனிநபர் கடன் திட்டத்தை வழங்குகிறது. தொழில் அல்லது வியாபாரம் செய்ய ரூ. 30 லட்சம் வரை குறைந்த  வட்டியில் கடன் பெறலாம். தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை என்ன.?

PREV
15
தமிழக அரசின் கடன் உதவி திட்டம்

தமிழக அரசு பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) சார்பில் தனிநபர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் ரூ. 30.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுயமாக தொழில், வியாபாரம் செய்ய, கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது

25
வட்டி விகிதம்

அந்த வகையில் ஆண்டு வருமானம் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் . 3,00,000/-மிகாது இருத்தல் வேண்டும்.

அதிகபட்ச கடன் தொகை- ரூ.20.00 இலட்சம்

வட்டிவிகிதம் (ஆண்கள்)- ஆண்டிற்கு 6%

வட்டிவிகிதம் (பெண்கள்)- ஆண்டிற்கு 6%

திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சம் 5 ஆண்டுகள்

35
தகுதிகள்

விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.

45
தேவைப்படும் ஆவணங்கள்

விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலர்கள்/மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.

1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.

2. சாதி சான்றிதழ்.

3. வருமான சான்றிதழ்.

4. உணவுபங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்.

5. ஆதார் அட்டை.

6. திட்ட அறிக்கை.

7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்

55
விண்ணப்பிக்கும் முறை

கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.

1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.

2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி

Read more Photos on
click me!

Recommended Stories