நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்துகிறார்
ஆதவ் அர்ஜூன் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேரசையை தீர்த்துக்கொள்ள பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.
எனவே அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.