சென்னை, கோவையில் இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய அப்டேட் இதோ!
ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எப்போது இல்லாத வகையில் இந்த முறை பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெயில் தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. அப்படி இருந்த போதிலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இன்று வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாளை பழனி முருகன் கோவிலில்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல் கோயம்புத்தூர் பகுதியில் இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.