ஈரோடு மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆடி 18ம் நாளான வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை காரணமாக அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.