Published : Dec 11, 2024, 04:18 PM ISTUpdated : Dec 11, 2024, 04:19 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25
Ramanathapuram District Collector
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும்.
45
Government Employee
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஜனவரி 13ம் தேதி திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் நிலையில் அதற்கு முந்தைய நாள் போகி பண்டிகைக்கும், சனி விடுமுறை வாரமுறையும் வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடக்கும் என்பது குறிப்பித்தக்கது.