ரூ.3 முதல் 8 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடவும், சொந்த தொழில் தொடங்க விரும்பவர்களுக்காக பயிற்சியும் வழங்கி வருகிறது மேலும் கடன் உதவி திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அந்த வகையில் 3 முதல் 8 லட்சம் வரை கடன் உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
24
3 முதல் 8 லட்சம் வரை கடன் உதவி திட்டம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களான சிறு தொழில் கடன், விராசத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விகடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 3,00,000/- ற்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ. 8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசத் கடன் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
34
கடன் உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு
எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள். முஸ்லீம்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை -600 001 என்ற முகவரியிலும்
மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கிகோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்காணும் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்