Published : May 28, 2025, 12:44 PM ISTUpdated : May 28, 2025, 01:26 PM IST
மது விற்பனை அரசுகளுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தருகிறது. புதுச்சேரியில் மது விற்பனை முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில், கலால் துறை மது விலையை உயர்த்தி இளைஞர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
நாளுக்கு நாள் மாறி வரும் நவ நாகரீக வளர்ச்சியின் காரணமாக மதுகுடிப்பது என்பது சாதரனமாக மாறிவிட்டது. மது குடித்தவர்கள் ஊர்களுக்குள் விடாமல் ஒதுக்கி வைத்த காலம் போய், மது குடிக்காதவர்கள் நண்பர்களின் கூட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகிவிட்டது.
இரவு நேர கொண்டாட்ட நிகழ்வுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் கைகளிலும் மதுபானம் பாட்டில்கள் காணப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் மது விற்பனை மூலம் பல மடங்கு பணமானது அரசிற்கு வருவாயாக கிடைத்து வருகிறது.
23
மதுபானம் விலை உயர்வு- இளைஞர்கள் ஷாக்
தமிழகத்தை பொறுத்தவரை ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் புதுச்சேரியில் மதுவிற்பனையை கேட்கவா வேண்டும். பல ஆயிரம் கோடி ரூபாய் கொட்டுகிறது. மது விற்பனையை மட்டுமே முக்கிய வருவாயாக புதுச்சேரி அரசுக்கு உள்ளது.
தமிழகம் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு மது குடிப்பதற்காகவே இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள். அந்த வகையில் புதுச்சேரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு அம்மாநில கலால் துறை ஷாக் கொடுத்துள்ளது.
33
மதுபானம் விலை உயர்வு ?
புதுச்சேரியில் ஒரு லிட்டருக்கு குறைந்தது 50 ரூபாய் முதல் 325 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளது. பீர் வகைகள் 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ள இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.