தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தே தீருவேன் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் பதவியேற்றதுமே பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் விற்பனையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுத்துறை சார்ந்த விஷயங்களை மேம்படுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார்.