நில அபகரிப்பு வழக்கு! முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

Published : Mar 04, 2025, 02:52 PM IST

சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி நில அபகரிப்பு வழக்கில் இருந்து அழகிரியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. முழுமையாக விடுவிக்க கோரிய அழகிரி மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

PREV
14
நில அபகரிப்பு வழக்கு! முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும்,  மறைந்த முதல்வருமான கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரிக்காக இப்பகுதியில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி, சம்பத்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார், கோயில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட 7 பேர் மீது நில அபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

24
MK Alagiri

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. MK Alagiri Petition Dismissed

34
MK Alagiri Case

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி மு.க.அழகிரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

44
MK Alagiri petition dismissed

இந்த இரு மனுக்களும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நில அபகரிப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அழகிரியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories