எனவே ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மனிதவளம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பு போன்ற நடைமுறை சவால்களாலும் மற்ற பயிர்களைப் போலவே கரும்பு சாகுபடிக்கான செலவும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 16 தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.