அடித்தது ஜாக்பாட்.! மாத சம்பளம் 2 லட்சம்- உடனே விண்ணப்பிங்க- தமிழக அரசு அறிவிப்பு

Published : Mar 04, 2025, 12:32 PM ISTUpdated : Mar 04, 2025, 12:36 PM IST

ஜெர்மனியில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ மற்றும் பட்டதாரி செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கவும்.

PREV
15
அடித்தது ஜாக்பாட்.! மாத சம்பளம் 2 லட்சம்- உடனே விண்ணப்பிங்க- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் படித்த படிற்கு வேலை தேடி பல லட்சம் பேர் பல ஊர்களுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.

மேலும் அரசு பணியில் இணைய ஆர்வமாக உள்ளவர்களுக்காக பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற பெரும் உதவியாக இருந்து வருகிறது. 
 

25
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

இதே போல வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதே வேளையில் விசா சம்பளம் என பல வித குளறுபடியால் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு தொடர்பான தகவலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன் படி துபாய், சவுதி, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பானது ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

35
ஜெர்மனியில் செவிலியர் பணி

இந்த நிலையில் தற்போது மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 இலட்சம் வழங்கப்படும்.

45
மாதம் 2 லட்சம் சம்பளம்

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025 அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

55
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories