தைரியம் இருந்தால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும்.! இபிஎஸ்க்கு சவால் விடும் கேசிபி

Published : Feb 18, 2025, 07:03 AM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். கட்சியை விட்டு நீக்கிப் பார்க்கட்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் திமுக செல்வாக்கு பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
15
தைரியம் இருந்தால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும்.! இபிஎஸ்க்கு சவால் விடும் கேசிபி
தைரியம் இருந்தால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும்.! இபிஎஸ்க்கு சவால் விடும் கேசிபி

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்து 8 வருடங்களை கடந்துள்ள நிலையில் இன்னும் அதிகாரத்தை பிடிக்க தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அதிமுக மூத்த தலைவர்கள் தனித்தனி அணியாக செயல்படுகிறார்கள். இதனால் வாக்குகள் பிரிந்து எதிர் அணியினர் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் வலது கரமாக இருந்த செங்கோட்டையன் தற்போது போர்கொடி தூக்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட கூட்டங்களில் பங்கேற்றார். 

25
அதிமுக உட்கட்சி மோதல்

இந்த நிலையில் செங்கோட்டையனை தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் என அதிமுக முன்னாற் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், பல்லடம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனவும் போலீசார்  தனிப்படைகள் எண்ணிக்கைதான் அதிகரிக்கத்து கொண்டு செல்கிறதே தவிர குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை என விமர்சித்தார்.  எனவும் இதேநிலை தொடர்ந்தால் 20 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது என கூறினார்.  

35
தைரியம் இருந்தால் செங்கோட்டையனை நீக்கட்டும்

அதிமுகவில் ஏற்பட்டிருக்கிற உட்கட்சி குழப்பம், கட்சியை ஒருங்கிணைக்க தவறுகின்ற எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளால் தான்  திமுக செல்வாக்கு பெற்றுஇருக்கிறது எனவும் திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக இல்லை என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றது, அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பதை காட்டுவதாக தெரிவித்த கே.சி. பழனிச்சாமி, தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கத் தவறினார்,

45
திமுகவிற்காக மறைமுக ஒப்பந்தம்

சுயநலத்துடன் நடந்து கொள்கிறார் எனவும் அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைக்கபட வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் உலகமே அதைத்தான் எதிர்பார்க்கிறது, ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் அது புரிய மாட்டேங்குது என தெரிவித்தார். திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மறைமுக ஒத்துழைப்பு தருகிறாரோ என்று தான்  அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பேசுவதாக புகார் கூறிய கே.சி.பழனிச்சாமி,

55
அதிமுகவில் பலருக்கு அதிருப்தி

செங்கோட்டையனை நீக்க ஏன் தயங்குகிறார்கள் என்ற கேள்விக்கு, நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது என பதிலளித்தார்.  அடுத்த சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என தெரிவித்தவர்,

அதிருப்தியால் இன்றைக்கு செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கிறார். இனி தொடர்ச்சியாக பலர் வருவார்கள் எனவும் இனி அணிகள் உருவாகாது. அணிகள் ஒருங்கிணையும், எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கப்பட்டுவார் என கேசி பழனிசாமி தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories