திருப்புவனம் அருகே காவல் நிலையத்தில் உயிரிழந்த காவலாளி அஜித்குமார் வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு, SP காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலைக்கு தூண்டிய நபர் யார் என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
25
ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை வெறித் தாக்குதலை அரங்கேற்றிய காவலர்களை மட்டும் இல்லாமல் அவர்களை தூண்டி விட்டவர்களையும் அதற்கு அழுத்தம் கொடுத்தவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
35
கே.சி.பழனிசாமி
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அஜித்குமார் காவல் நிலைய மரணம் விவகாரத்தில், கடைநிலைக் காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். DSP சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார், SP காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், அந்த SPக்கு அழுத்தம் கொடுத்து வழக்கு கூட பதிவு செய்யாமல் 10 பவுன் தங்க நகையை மீட்பதற்கு அடித்து துன்புறுத்தி கொலை செய்கிற அளவுக்கு தூண்டிய நபர் யார்? ஏன் அரசாங்கம் அந்த தகவலை வெளியிட மறுக்கிறது. மாவட்ட SP மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நிச்சயமாக அந்த SP க்கு அழுத்தம் கொடுத்து யார் என்பது தெரிந்திருக்கும். அல்லது அதை தெரிந்துகொண்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
55
அழுத்தம் கொடுத்தவர்களும் குற்றவாளி
இந்த குற்ற வழக்கில் இப்படி ஒரு கொடுமையான கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றிய காவலர்களை மட்டும் இல்லாமல் அவர்களை தூண்டி விட்டவர்களையும் அதற்கு அழுத்தம் கொடுத்தவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் எச்சரிக்கை மட்டுமே விடுத்துக் கொண்டிருக்கிறார், எப்பொழுது நடவடிக்கை எடுப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.