தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்த நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவார். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள்.
முக்கிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.
அன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்ல உள்ளதால் போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை காரணமாக பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 17. 07.2023 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.