கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் எப்போது தெரியுமா? வெளியான தகவல்.!

First Published | Jul 15, 2023, 9:05 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

அதில் மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

இந்த நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் 80% குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.  

1000 rupees scheme

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ம் முதல் தொடங்கும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 17ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டலம் முழுமைக்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.  18ம் தேதிக்கு முன்பாக மண்டலத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 30 பேர் கொண்ட குழுக்களாக முதன்மை பயிற்சியாளர்கள் இணை பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.

18ம் தேதி முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும். குடும்ப அட்டை எண்,  முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் முதலிய விவரங்களை விண்ணப்ப படிவங்களில் எழுத வேண்டும். 20ம் தேதி முதல் டோக்கன்கள்  மற்றும் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!