இதனைக் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என முன்னாள் அமைச்சர் கூறக்கூடும். எனவே மக்கள் நம்பிக்கையை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கருத வேண்டும். நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தனது வலுவை இழந்து விடும் என காட்டமாக தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.