TVK Leader Vijay | கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக தலைவர் விஜய் மெல்ல மெல்ல பாஜக பக்கம் நகர்வதாக பத்திரிகையாளர் மணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்பிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
24
அரசியல் விளையாட்டை ஆரம்பித்த பாஜக..?
தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று பாஜக உள்ளிட்ட கட்சிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டடணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்பிகள் குழு மீது விசிக உள்ளிட்ட கட்சிகளும் சந்தேகம் எழுப்புகின்றன. குறிப்பாக தேஜ கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட விசரணைக் குழுவை விமர்சித்து பேசிய திருமாவளவன், கரூர் பெருந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது. இதனை முறியடிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
34
முதல்வருக்கு சவால் விட்ட விஜய்..!
மேலும் விஜய் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க வீடியோவில், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் பிரசாரம் மேற்கொண்டோம். நாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தேன் ஆனால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என எச்சரித்தனர். அதனால் தான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன். இதுவரை 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளோம். ஆனால் கரூரில் மட்டும் அசம்பாவிதம் நடைபெற்றது எப்படி? மக்களுக்கு அனைத்து உண்மையும் தெரியும். முதல்வர் அவர்களே உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் என்னை என்ன வெண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்று பரபரப்பான வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில் விஜய்யின் நிலைப்பாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி கருத்து தெரிவித்துள்ளார். விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், “நடிகர் விஜய் மெல்ல மெல்ல பாஜக பக்கம் நகர்ந்து கொண்டு இருக்கிறார். பாஜக சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு வெறும் 3 மணி நேரத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டோம் என்று சொல்கிறார்கள். மேலும் பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த ஒருமணி நேரம் கழித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிடுகிறார். எம்பிகள் குழு தெரிவித்த கருத்தையே விஜய்யும் வெளிப்படுத்தி உள்ளார். விஜய் மெல்ல மெல்ல பாஜக பக்கம் நகர்ந்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.