"உங்களுக்கு இப்போது நல்ல நேரம் இருக்கிறது என்பதற்காக அடுத்தவரைக் காலி செய்ய நினைக்கிறீர்கள். ஆனால், உங்களால் யாரையும் அழித்துவிட முடியாது. நாளை அவருக்கு நல்ல நேரம் வரும்போது, அவர் உங்களைப் பழிவாங்கும் அளவுக்கு நீங்கள் நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் வீழ்ச்சி என்பது, நீங்கள் ஒதுக்கிய மனிதரின் நல்ல நேரம் ஆரம்பிக்கும் இடத்தில் தான் தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்." நான் சொன்ன இந்த ஆழமான உண்மையைப் புரிந்து கொண்டு, தங்களைத் திருத்திக் கொண்ட மனிதர்களும் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும், அதிகாரத்தில் இருப்பதும் வெறும் நம் தனிப்பட்ட திறமையால் மட்டுமே அல்ல; நமக்கான 'நேரத்தால்' தான். அந்த நேரத்தைக் கொடுப்பது இறைவனின் பெருங்கருணை. இதை உணர்வதற்குப் பெரிய இறை நம்பிக்கையும், மன அடக்கமும் தேவை.