தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதம் திரும்பி விந்துவிட்டதோ என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வெயிலின் கொடூரத்தாண்டம் இருந்து வருகிறது. இதனால், நேரங்களில் பொதுமக்கள் வீட்டிலே முடங்கி விடுகின்றனர். இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கத்தை நன்றாகவே உணர முடிகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நேற்று முன்தினம் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது.