ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக.! எடப்பாடியின் திட்டம் என்ன.?

Published : Jan 08, 2025, 07:32 AM ISTUpdated : Jan 08, 2025, 07:34 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுகவின் தொடர் தோல்விகள் மற்றும் பிளவுகள் காரணமாக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. 

PREV
15
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக.! எடப்பாடியின் திட்டம் என்ன.?
Sasikala EPS OPS

அதிமுக-அதிகார மோதல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல வித குழப்பங்கள் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது. அதன் படி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியால் பல பிளவுகளும் உருவாகியுள்ளது. ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனி கட்சியை தொடங்கி தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி வருகிறார்கள். இதனால் வாக்குகள் பிரிந்து கடந்த 8 வருடங்களாக தோல்விக்கு மேல் தோல்வி தான் பரிசாக கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் 3 வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது.

25
evks elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்

இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு தேர்தல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் மறைந்ததை அடுத்து , ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

35
Erode

அரசியல் கட்சிகள் நிலை என்ன.?

அந்த வகையில் திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால் மீண்டும் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. பாஜகவும் களம் இறங்க தயாராக உள்ளது. அடுத்ததாக நாம் தமிழர் கட்சியும் போட்டியிடவுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் போட்டியில்லையுனவும், யாருக்கும் ஆதரவு இல்லையென அறிவித்து விட்டது. இந்த நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தேர்தலை புறக்கணிக்குமா.? அல்லது தேர்தலை எதிர்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

45
Sasikala and eps

இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக

அந்த வகையில் கடந்த முறை நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக சந்தித்தது. அப்போது மிகவும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றது. 
இதனையடுத்து கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்து விட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

55
eps admk

 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு  அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் நடைபெறும் எனவும், கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories