மகளிருக்கு ரூ.10 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு; யாருக்கு கிடைக்கும்?

First Published | Jan 8, 2025, 7:15 AM IST

தமிழக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்,சொந்த தொழில் செய்வதற்கு மானிய உதவி திட்டங்களை வழங்கு வருகிறது. இதன் படி 7.20 லட்சம் முதல் 11 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம் தொடர்பாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு முகாமை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி கடனுதவியையும் தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் பல ஆயிரம்  இளைஞர்கள் சொந்த தொழில் செய்வதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. 

prawns export

மீன், இறால்களுக்கு தட்டுப்பாடு

இதன் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு மானிய உதவி திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன் படி மீன், இறால் வளர்ப்பில் நல்ல லாபம் தரும் காலமாக தற்போது உள்ளது. அசைவ உணவுகளுக்கு நாளுக்கு நாள் டிமான்ட் அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் கடலில் கிடைக்கும் மீன், இறால் போன்றவற்றை தனியாக குட்டை அமைத்து வளர்த்து பல லட்சம் ரூபாயை லாபம் சம்பாதிக்கவும் முடியும். அந்த வகையில் கடலிலேயே மிக அதிக விலை போவது இறால், ஒரு கிலோ 400 முதல் 500 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.

Tap to resize

Prawn Cultivation

இறால் வளர்க்க மானியம்

பல நேரங்களில் மழை, புயல், காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல் வருடத்தில் 40 நாட்கள் மீன் பிடிக்க தடை காலமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சமயத்தில் வளர்ப்பு மீன் மற்றும் இறால்களுக்கு கடும் கிராக்கி உள்ளது. எனவே தனியாக இறால் பன்னை அமைத்து விற்பனை செய்ய தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இறால் வளர்ப்பதற்கு போதுமான அளவு நீர் ஆதாரம் இல்லையா?? போதுமான நிலம் இல்லையா? உங்களுக்காக பயோ பிளாக் (உயிர் கூழ்மம்] தொழில்நுட்பம்!! மூலம் இறால் வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu Government Subsidy Scheme

11 லட்சம் ரூபாய் மானியம்

இதன் படி தொழில்நுட்பத்தின் வாயிலாக குறைந்த நிலப்பரப்பில் (0.1 ஹெக்டேர்) குறைவான நீரினை உபயோகப்படுத்தி அதிக அளவு இறால் உற்பத்தி செய்ய இயலும். இத்திட்டம் திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஆகும் மொத்த செலவு ரூ. 18.00 இலட்சம் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ரூ. 7.20 இலட்சமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு ரூ. 10.80 இலட்சமும் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Prawn Cultivation

வருடத்திற்கு 15 லட்சம் வருமானம்

மேலும் ஒரு 0.1 ஹெக்டேர் பயோபிளாக் குளத்தில் 3 இலட்சம் இறால் குஞ்சுகள் இருப்பு செய்து 90 நாட்கள் வளர்த்தால் 4 முதல் 5 டன் உற்பத்தி கிடைக்கும். ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யலாம். வருடத்திற்கு ரூ. 15.00 இலட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற மீன்வளத்துறை அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!