பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இது 1989ஆம் ஆண்டு மருத்துவர் எஸ். ராமதாஸ் தொடங்கினார். அவரது மகன் அன்புமணி ராமதாஸ், கட்சியின் செயல்தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே உட்சகட்ட மோதல் ஏற்பட்டது.
ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, தன்னைத்தானே கட்சித் தலைவராக அறிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகக் குழுவை கலைத்து, அதில் அன்புமணியை நீக்கி புதிய குழுவை அமைத்தார். மேலும், 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றினார்.