வருகின்ற 31ம் தேதி தொடங்கும் IRCTCயின் பேக்கேஜில் ஊட்டி, முதுமலை, குன்னூர் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்கலாம். மொத்தமாக 5 பகல், 4 இரவுகள் அடங்கிய இந்த பேக்கேஜில் நபர் ஒருவருக்கு ரூ.8,800 வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலாவுக்கான பாரத் கௌரவ் ரயில் வருகின்ற 31ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படுகிறது. பேக்கேஜில் பயணிகளுக்கான உணவு, விடுதி வசதி, சுற்றுலா பயணிகளுக்கான காப்பீடு உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.