விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நாளை மறுநாள் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில், இந்த மாநாட்டில் இடம்பெற்றுள்ள 70 அடி கட்டவுட் ஒன்று பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது என்றே கூறலாம். காரணம் இந்த போஸ்டரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களுடைய போஸ்டர்களுக்கு மத்தியில் இரண்டு முக்கிய பெண் தலைவர்களின் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காந்தியால் ஜான்சி ராணி என்று அன்போடு அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாள் அவர்களின் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல பெண்களின் முக்கியமானவர் அஞ்சலை அம்மாள். கடலூரில் பிறந்து இந்திய விடுதலைக்காக சுமார் 7.5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அவர்.