புரட்டாசி மாத சிறப்பு தரிசனம்
தமிழக அரசு சார்பாக பல்வேறு ஆன்மிக திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயிலுகளுக்கு குடமுழக்கு, ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறை நிலங்களை மீட்பது, கோயில்களை பராமரிப்பது உள்ளிட்ட ஆன்மிக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் ஆடிமாதத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களுக்கு தமிழக அறநிலையத்துறை சார்பாக இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.
தற்போது புரட்டாசி மாதத்தையொட்டி பொருமாள் கோயிலுக்கு இலவசமாக பக்தர்களை அழைத்து செல்லப்டவுள்ளனர். இதில் குறிப்பாக விழுப்புரத்தில் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூரில் அருள்மிகு சக்கரபாணி பெருமாள் திருக்கோயில், திருச்சியில் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பார்த்த சாரதி கோயில், அஷ்ட லட்சுமி கோயில், ஸ்தல சயன பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் தேவராஜ பெருமாள் திருக்கோயில், இதே போல மதுரை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
ஆயிரம் பக்தர்களுக்கு இலவச ஆன்மிக பயணம்
இந்த இடங்களுக்கு எல்லாம் அந்த அந்த மாவட்டத்தில் இருந்து அறநிலையத்துறை சார்பாக பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர். புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட முதியோர்கள் தலா 1,000 பக்தர்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், மதுரை,திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள கோயில்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படி, இந்த திட்டமானது வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
இலவசமாகவே பார்க்கலாம்.! சென்னை வானத்தில் குட்டிக்கரணம் அடிக்கப்போகுது ரஃபேல், சூகோய், தேஜாஸ்- எப்போ தெரியுமா.?
எந்த, எந்த கோயில் தெரியுமா.?
21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. சென்னை மண்டலத்தில் உள்ள முக்கிய வைணவ கோயில்களான திருவல்லிக்கேணி. அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயிலுகளுக்கும்,
திருச்சியில் உள்ள அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோயில், மண்டலத்தில் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில், கோவிலடி, அருள்மிகு அப்பகுடத்தான், திருக்கோயில் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் உட்பட பல கோயில்களுக்கும் அழைத்து செல்லப்படவுள்ளனர். இதே போல காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம். அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், அருள்மிகு பாண்டவதூத பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், அருள்மிகு தேவராஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் மயிலாடுதுறை, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கோயிலுகளுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 19.09.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
தகுதி
புரட்டாசி மாத பெருமாள் கோயில் ஆன்மிக சுற்றுலாவிற்கு தகுதியுள்ளவர்களாக மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்
temple
தமிழக அரசின் திட்டங்கள்
இந்த திட்டம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், மூத்த குடிமக்கள் மன நிறை வாக கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இராமேசுவரம் காசி, அறுபடை வீடுகள், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும். புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களும் ஆன்மிகப் பயணம், மானசரோவர். முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கு அரசு மானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு
இந்த ஆண்டிற் கான புரட்டாசி மாத வைணவ திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் வருகிற செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம். விழுப்புரம். தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் திரு நெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது. 1000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் இத்திட்டத்திற்காக அரசு ரூ. 25 இலட்சத்தினை அரசு மானியமாக வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.