மகளிர் உரிமை தொகை.! சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி

First Published | Jan 8, 2025, 10:26 AM IST

தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 1 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், பயன்பெறாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று முன் தினம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. அப்போது தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து புறக்கணித்து வெளியேறினார். அதே நேரத்தில் அதிமுகவும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்ற கேள்வியோடு போராட்டம் நடைபெற்றது. இதனால் சட்டப்பேரவை வளாகம் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் கூடியது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது.

magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை

இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட்டமானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்றைய கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன் படி இன்று காலை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேடச்சந்தூர் உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.  

Tap to resize

திண்டுக்கல்லில் மகளிர் உரிமை தொகை

அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சரும், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் விண்ணப்பித்த 5 லட்சத்து 27 ஆயிரம் பேரில் 4 லட்சத்து 897 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் பதிலளித்தார்.  

Magalir Urimai Thogai

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை தொகை

இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்பெறாத மகளிருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி,

தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறினார். அதில் முதல் கட்டமாக தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 

3 மாதங்களுக்குள் புதிய விண்ணப்பம்

மேலும் மேல்முறையீட்டின் மூலம் 9 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டதாகவும் அதன் படி  கடந்த டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் பதிலளித்தார்.  

இதுவரை இந்த மகளிர் உரிமை திட்டத்தின்  கீழ் பயன்பெறாத மகளிரை, உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், புதியதாக விண்ணப்பிக்கவும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி பதிலளித்தார்.

Latest Videos

click me!