இனி ஒரு லட்சம் அல்ல.! 2 லட்சமாக உயர்வு- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Jan 08, 2025, 10:02 AM IST

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தில் விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை தொகை ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

PREV
15
இனி ஒரு லட்சம் அல்ல.! 2 லட்சமாக உயர்வு- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
tamilnadu hospital

தமிழக அரசு சார்பாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை, எளிய மக்களுக்கு அவசர காலத்தில் பெரிதும்  பயன் அடையும வகையில் மருத்துவ உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டு  தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
 

25
Inuyir Kaappom scheme

இந்த திட்டத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. மேலும் அவசர தேவைகளுக்கு இலவசமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த திட்டம் மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது 2018ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

35
hospital

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

45
accident

மேலும்  800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000 வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வருமான வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சையை பெற்றனர். இந்த நிலையில் மக்களுக்கு அவசர தேவைக்கு உதவும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

55
accident treatment

இந்ந்த திட்டத்தின் படி, விபத்து ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் வகையிலும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories