இபிஎஸ் அணியில் அதிகரித்து வரும் பாஜக ஆதரவாளர்கள்! இது அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதா? KC.பழனிசாமி பகீர்
KC Palanisamy: அதிமுகவில் பாஜக ஆதரவு நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
KC Palanisamy: அதிமுகவில் பாஜக ஆதரவு நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. இவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கப்போம் என்று கே.சி.பழனிசாமி கூறியதை அடுத்து கடந்த 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அக்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துகள் தெரிவித்து வருகிறார்.
பாஜக ஆதரவு நிர்வாகிகள்
இந்நிலையில் பாஜக ஆதரவு நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதா? என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!
பாஜக விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அம்மா மறைவுக்கு பின் தீவிர பாஜக விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக நலனுக்காக பாஜகவை எதிர்த்த கே.சி.பியை தன் சுயநலனுக்காக கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு பின் நிதர்சனத்தை உணர்ந்த #EPS நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜவுடனான உறவை முறித்துக்கொண்டு EPS. உறுதியாக பாஜகவை எதிர்க்காவிட்டாலும் சற்று விலகியே இருந்தார்.
தளவாய் சுந்தரத்தின் கட்சிப்பதவி பறிப்பு
RSS பேரணியில் பங்கேற்றதற்காக தளவாய் சுந்தரத்தின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட முன்னாள் MLA விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவ்வாறு பாஜக சாயல் விழுந்துவிடக்கூடாது என தெளிவாக இருந்தார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு இந்த அவமானம் தேவையா.? போட்டுத்தாக்கும் அதிமுக மாஜி எம்.பி
அமித்ஷாவுடன் சந்திப்பு
ஆனால் தற்பொழுது டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின் "கூட்டணி வேறு கொள்கை வேறு, எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்" என செய்தியாளர்களிடம் சொன்னார்.
அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதா?
அதை தொடர்ந்து "இந்தியாவின் இரும்பு மனிதர் #அமித்ஷா" என உதயகுமார் புகழாரம் சுட்ட செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி என பாஜக ஆதரவு நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.