பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! நாளை தான் கடைசி நாள்!

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சைனிக் பள்ளி 6, 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்.

Sainik

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளியில், இந்திய பொது பள்ளிக்குழு உறுப்பினர் மைய உயர் கல்வி குழுவின் பாடத்திட்டத்தின் கீழ் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவர். நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு சேர ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். 

Sainik Entrance Exam

இந்நிலையில்  2025-26-ம் கல்வி​யாண்​டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்​ தேர்வு பிப்​ரவரி மாதம் நடத்​தப்பட உள்ளது. இந்த தேர்​வுக்கான இணையதள விண்​ணப்பம் கடந்த டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tap to resize


All India Sainik Schools Entrance Examination

இந்நிலை​யில் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் நாளை​யுடன் நிறைவு பெறுகிறது. விருப்​ப​முள்​ளவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக உடனடியாக விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்பக் கட்ட​ணமாக எஸ்சி/எஸ்டி பிரி​வினர் ரூ.650-ம், இதர பிரி​வினர் ரூ.800-ம்  ஆன்லைனில்  ஜனவரி 24-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

AISSEE

இதுதவிர விண்​ணப்​பிக்​கும் வழிமுறை​கள் தகுதி​கள், ஹால்​ டிக்​கெட் வெளி​யீடு உள்ளிட்ட விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (www.nta.ac.in) தெரிவிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்​பு கொண்டு உரிய ​விளக்​கம் பெறலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!