இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வி்ல் பங்கேற்கும் விதமாக நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் விவகாரத்தில் புதன் கிழமை (இன்று) நல்ல செய்தி வந்து சேரும், தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்சினையில் சுமூக தீர்வை எட்டவே மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.