குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!

Published : Jan 21, 2025, 07:29 PM ISTUpdated : Jan 21, 2025, 07:42 PM IST

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்யலாம்.

PREV
15
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!
TASMAC

தமிழக அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு  எச்சரிக்கை விடுத்தாலும் அவ்வப்போது ஊழியர்கள் மற்றும் குடிமகன்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. 

25
TASMAC Shop

இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையும் படிங்க: என்னது! தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஏழரையை கூட்டப்போகுதா மழை? வானிலை மையம் சொல்வது என்ன?

35
Chennai High Court

இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டார். அரசு தரப்பில் இடையீட்டு மனுதாரர் தரப்பிலும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. 

45
QR Code system

மேலும் அரசு தரப்பில், டாஸ்மாக் மதுபான கடையில் மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு நுகர்வோர்கள் வாங்கும் ஒவ்வோரு பாட்டிலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும். அதன் பின் கூடுதல் தொகை வசூக்கப்படுவதாக புகார் ஏதும் எழாது என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறையா?

55
Tamilnadu Government

தமிழக அரசின் வாதத்தை அடுத்து நீதிபதி டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கும் விவகாரத்தில் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கையை உறுதி செய்து வழக்கை முடித்து வைத்தார். டாஸ்மாக் கடைகளில் QR Code முறையில் மது விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது குடிமகன்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Read more Photos on
click me!

Recommended Stories