
ரேஷன் கார்டின் முக்கியத்துவம்
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர். மேலும் அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு, தீபாவளி பரிசு தொகுப்பு, வெள்ள நிவராணம் பெறுவதற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
ரேஷன்கார்டில் முறைகேடு
அந்த வகையில் அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், உதவிகள் மக்களிடம் செல்ல வேண்டும் என நோக்கமாக உள்ளது. ஆனால் இதிலும் பெரிய அளவில் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. போலி ரேஷன் அடைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஒருவருக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வேறு, வேறு பெயரில் இருப்பது தெரியவந்தது. மேலும் உணவு பொருட்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகாரும் எழுந்தது. இதனால் உண்மையாக பாதிக்கப்படக்கூடிய ஏளை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சரவர கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டது.
ரேஷன் கார்டில் கேஒய்சி அப்டேட் எப்படி.?
கேஒய்சி என்பது Know Your Customer என்பதுதான் Kyc-யின் விரிவாக்கமாகும் கேஒய்சி என்பது தங்களது அடையாளங்களை சமர்பிப்பதாகும். அந்த வகையில் ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன்கடைகளில் நேரடியாக சமர்பிக்கலாம். இந்த அப்டேட்டை முடிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் ஏராளமான மக்கள் தங்களது தகவல்களை உறுதி செய்து கொண்டனர். மேலும் ஆன்லைனிலும் கேஒய்சி தொடர்பாக தகவல்களையும் தேடினார். இந்தநிலையில் ரேஷன் கார்டு கேஒய்சிக்கான பதிவு செய்வதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 31 ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டது.
கூடுதல் காலஅவகாசம்
எனவே இந்த மாதம் இறுதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் தங்களது ரேஷன் கார்டில் அப்டேட் செய்யாத காரணத்தால் மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி கடைசி தேதி டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 கோடியே 2 லட்சத்து74 ஆயிரத்து 901 பயனாளிகள் உள்ளனர். இதில் தற்போது வரை 6 கோடியே 98 லட்சத்து 82ஆயிரத்து 441 பேர் பதிவேற்றம் செய்துள்ளனர். தங்களது விவரங்களை சமர்பிக்காதவர்கள் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கவும், போலி பெயர்களை ஒழிக்கவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ரேஷன் கார்டில் அப்டேட் ரொம்ப எளிதாக செய்ய முடியும். .
ஆன்லைனில் அப்டேட்
அதற்கு தேவையான ஆவணங்களை பொறுத்த வரை ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகள் இருந்தால் போதுமானதாகும். ரேஷன் கார்டு கேஒய்சி சரிபார்ப்பதை இரண்டு முறையில் மேற்கொள்ளலாம். ஒன்று இணைய வழியில் மேற்கொள்ளலாம். அதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம் அதில் ரேஷன் கார்டு நிலை என்ற விருப்பத்தை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும் அடுத்தாக குடும்ப அட்டை செயல்பாட்டில் இருந்தால் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டிருக்கும் என காட்டும். இல்லையென்றால். ஆதார் செயலிழக்கப்பட்டது என ஸ்கிரீனில் காட்டினால். அதனை கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை பதிவிட வேண்டும். முடிந்துவிடும். இல்லையென்றால் மத்திய அரசின் இ்ந்த https://nfsa.gov.in/sso/frmPublicLogin.aspx இணையதளம் மூலமாகவும் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் எளிதாக அப்டேட்
இதனை தொடர்ந்து ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிக்கு ஓடிபி வரும் இதனை பதிவு செய்தால் வெற்றிகரமாக அப்டேட் நிகழ்வு ஆனால் ஆன்லைனில் கேஒய்சி பதிவு செய்வது கடினமாக இருந்தாலோ அல்லது அந்த படிவத்தை விண்ணப்பிக்க முடியவில்லையென்றோலோ வீட்டின் அருகில் இருக்கும், நாம் ரேஷன் பொருட்கள் வாங்கும் நியாயவிலைக்கடைக்கு சென்றால் கை ரேகை மட்டு்ம பதிவு செய்தால் போதும் அடுத்த ஒரு சில நிமிடங்களில் நமது ஆதாரங்கள் பதிவேற்றப்பட்டு விடும்.